Wednesday, October 25, 2017

Intru October 24... Tamil important news and history.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் !(1801அக்டோபர் 24)

இன்று மாலைக்குள் தாங்கள் இருவரும் சரண் அடையவில்லை என்றால்

தாங்கள் உயிராக நினைக்கும் #காளையார்_கோவில் வெடி வைத்து தகர்க்கபடும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த

மருது இருவர் உடனடியாக காளையார் கோவில் முன்பே தூக்கில் இடப்பட்டனர். கதறி துடித்த எண்ணற்ற மக்கள் சுட்டு கொல்லபட்டனர்.

மருதுகளின் குடும்பமே அழிந்தது. அவர்களின் ஓரே மகன் 15 வயது பாலகன் நாடுகடத்தி சிறை வைக்கப்பட்டு சிறையிலே கொல்லபட்டான்.

தூக்கில் போடபட்ட மருது இருவரை இரண்டு நாட்கள் இறக்கவே இல்லை ஆங்கிலேயன் 27 ம் தேதி காலை கீழே இறக்கி கழுத்தை அறுத்து புதைத்தான் ஆங்கிலேயன்.

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

வீரத்தில் வெல்ல முடியாத மாவீரர்களை
வஞ்சகத்தால் வீழ்த்தினான் வெள்ளையன் .

"சரணடையாவிட்டால் காளையார்கோவிலை வெடி வைத்து தகர்ப்போம்" என்று அறிவித்தனர்.

காளையார்கோயிலை காக்க சரணடைந்த மாவீரர்களை
1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். (இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது)

#சிவகங்கை_சீமை மாவீரர்களுக்கு வீரவணக்கம்!