டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ ( நேர்முக ேதர்வு அல்லாத பதவி) பதவியில் அடங்கிய 33 வகையான பதவிகளில் உதவி அலுவலர் பணியில் காலியாக உள்ள 1,863 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in, www.tnpscexams.net) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம், தேர்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த நவம்பர் 13ம் தேதி கடைசி நாள். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=172513#sthash.FZ67sYSH.dpuf