Friday, August 22, 2014

Chennai First in India General Knowledge 2014 - Chennai Unmaigal

Chennai Birthday August 22 (Madras) - Tamil Font

சென்னையின் சில சுவையான முதல்கள் இங்கே : 

* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா
*இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன.
* இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.
* ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !
* இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !
* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான்.
* இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் .
* இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.
* இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம்.
இன்றொடு சென்னைக்கு வயசு 375


tags,
chennai age is 375, madras born, Chennai real gk. 1st in india,

No comments: