Sunday, January 24, 2016

Tamilil Sila Pothuarivu - Therinthukolvom

கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கான தகவல்கள் - தெரிந்து கொள்வோமா?

* திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

* .ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

* இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

* ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

* முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

* அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது பழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

No comments: